பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) இளங்கலை கணித வரைவுப் பாடத் திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதை திரும்பப்பெறவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இளங்கலை மாணவர்களுக்கான 9 பாடங்களுக்கு வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக கடந்த மாதம் வெளியிட்டது.
அவற்றை பல்வேறு தரப்பினரும் பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் கணிதத்துக்கான வரைவுப் பாடத் திட்டத்தை பார்த்த ஆய்வாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பாடத் திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என 900-க்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் யுஜி.சிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கணித வரைவுப் பாடத்திட்டத்தில் இயற்கணிதம் (அல்ஜிப்ரா), உண்மையான பகுப்பாய்வு மற்றும் பயன்பாட்டுக் கணிதம் போன்ற தலைப்புகளில் போதுமான விளக்கம் இல்லை.
இயற்கணிதம் குறுகிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இளங்கலை பாடத்திட்டத்தில் இயற்கணிதத்தில் குறைந்தது மூன்று பாடங்கள் அவசியம். கணிதத்தின் எதிர்காலமும் உண்மையில் நாட்டில் உள்ள அனைத்து அறிவியல் முயற்சிகளும் ஆபத்தில் உள்ளன.
பயன்பாட்டுக் கணிதமும் குறுகிய மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. புரோகிராமிங் மற்றும் எண் முறைகள் மய்யத்திற்கு வெளியே உள்ளன. புள்ளி விவரங்கள் ஒரு பாடத் திட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளன.
புள்ளி விவரங்கள், எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளில் நடைமுறை மற்றும் பயன்பாடு சார்ந்த கூறு இருப்பது இயற்கையானது மற்றும் வழக்கமானது. இந்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.
காலத்தை கணிக்கும் இந்திய பழங்கால முறையான கால கணபனா, இந்திய அல்ஜிப்ரா, இந்திய பாரம்பரியத்தில் புராணங்களின் முக்கியத்துவம், நாரத புராணத்தில் காணப்படும் அடிப்படை எண் கணித செயல்பாடுகள் மற்றும் வடிவியல் தொடர்பான கணிதக் கருத்துகள் மற்றும் நுட்பங்களில் கவனம் செலுத்துதல் ஆகியவை இளங்கலை மாணவர்கள் கணிதத்தில் படிக்க வேண்டும் என்று யு.ஜி.சி. விரும்புகிறது.
பாரத பீஜகனிதாவின் வரலாறு மற்றும் வளர்ச்சியை கற்பிக்கவும், பரவர்த்யயோஜயேத் சூத்திரத்தைப் (பாரம்பரிய வேத கணித நுட்பம்) பயன்படுத்தி பல்லுறுப்புக் கோவைகளைப் பிரிக்கவும் யு.ஜி.சி. பரிந்துரைத்துள்ளது.
மேலும் பஞ்சாங்கம் போன்ற கருத்துகளைக் கற்பித்தல் மற்றும் சடங்குகள் மற்றும் பண்டிகைகளில் பயன்படுத்தப்படும் முகூர்த்தங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது போன்றவையும் இந்த பாடத் திட்டத்தில் இடம்பெற்று உள்ளன.
அத்துடன் வானியல், புராணம் மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைத்து, இந்தியாவின் வளமான கால–அறிவியல் பாரம்பரியத்தை குறிப்பிட்டு இருக்கிறது. இது பண்டைய ஆய்வகங்கள், உஜ்ஜயினியின் பிரதான நடுக்கோட்டு, மற்றும் பண்டைய இந்திய வேத நேர அலகுகளான காதிஸ் மற்றும் விகாதிஸ் கிரீன்விச் சராசரி நேரம் மற்றும் இந்திய நேரம் போன்ற நவீன அமைப்புகளுடன் எவ்வாறு ஒப்பிடுகின்றன என்பதையும் உள்ளடக்கி இருக்கிறது.
இவ்வாறு கடுமையான குறைபாடுகளால் நிரம்பியுள்ள இந்த பாடத் திட்டத்தை ஏற்றால் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே இந்த பாடத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு இந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அறிவுச் சாளரம். ஆனால் பல்கலைக் கழக மானியக் குழு திணிக்க விரும்பும் கல்வித் திட்டம் என்பது மாணவர்களைப் பழங்கால பஞ்சாங்கப் படுகுழியில் தள்ளும் ஏற்பாடாகவே உள்ளது.
புராணங்கள் என்பவை பக்திக் கிறுக்கால் உளறிக் கொட்டப்பட்ட குப்பை மேடாகும். அறிவியலுக்கு எதிரானது.
செயற்கை உயிர் அணு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒரு கால கட்டத்தில்… நாரத புராண எண் கணிதம் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டுமாம்.
நாரத புராணத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் தெய்வீகத் தன்மை கூறப்பட்டுள்ளது. எண் என்பது வெறும் கணக்குப் பொருளாக இல்லாமல் தத்துவம், சக்தி, தெய்வீகப் பிணைப்பு கொண்டதாக நாரத புராணத்தில் கூறப்படுகிறது.
ஒவ்வொரு எண்ணும் ஒரு கோள், ஒரு தெய்வம், ஒரு குணம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாகக் கூறுகிறது நாரத புராணம். எடுத்துக்காட்டாக,
- (ஒன்று) ஆதித்யன் (சூரியன்) ஆதிமூலம், ஆதிக்கம் தலைமைத் தன்மை.
- (இரண்டு) சந்திரன், மனம், அன்பு, மென்மை.
- (மூன்று) குரு (பிரகஸ்பதி) ஞானம், கல்வி, ஆன்மிகம்.
- (நான்கு) ராகு நடைமுறை கட்டுப்பாடு, நிலைத்தன்மை.
- (அய்ந்து) புதன், புத்திசாலித்தனம், தொடர்பியல்.
- (ஆறு) சுக்கிரன், கலை, அன்பு, குடும்பம்.
- (ஏழு) கேது, ஆன்மிகம் தியானம், மர்மம்.
- (எட்டு) சனி, கிரமம், கடமை, நியாயம்
- (ஒன்பது) செவ்வாய், வீரியம், ஆற்றல், போராட்டம்
எப்படி இருக்கிறது? இதில் ஏதாவது அறிவுக்குப் பொருந்தக் கூடிய பொருள் இருக்கிறதா? சரி, ஒன்பது வரை தானே தங்கள் மனதில் தோன்றியவாறு பிதற்றி வைத்துள்ளார்களே, அதில்கூட பத்து என்ற எண்ணைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன்?
எண் கணிதம் என்ற ஒரு மூடத்தனம் உண்டு. இதில் படித்த கிறுக்கர்கள் கூட நம்பித் தொலைப்பது உண்டு.
சென்னை மாநகராட்சியில் வீட்டு இலக்கம் 13 என்று