பிஜேபி அண்ணாமலை திடீர் பல்டி!
சீரங்கத்தில் 2006இல் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையையும், தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய பீடத்தையும் (பலகை என்று ‘சாமர்த்தியமாக’ சொல்லுகிறார்) அப்புறப்படுத்துவோம் – அகற்றுவோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்ட ம்ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை பேசி இருக்கிறார். இதுகுறித்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (9.11.2023) திடீரென்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் கே. அண்ணாமலை திடீர் பல்டி அடித்துள்ளார். நாங்கள் பெரியாருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்போம் என்று பேசி இருக்கிறார். திரு. எல். முருகன் தமிழ்நாடு பிஜேபி தலைவராக வந்தபோது பெரியார்பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம் என்று கூறியதையும் நினைவூட்டுகிறோம். அண்ணாமலையோ வாயைக் கொடுத்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்