கேள் (GALE) சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும் முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனித தத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.
‘கல்லறைத் தோட்டத்தை கடக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக்காவில் உலவி வந்த இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற ஒரு நம்பிக்கை. சிரிக்காதீர்கள்! செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமை படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம்:
‘சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைகிறார்கள்’ என்று நாம் சொல்வது போல மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்
சிகரெட் பற்றவைத்தலில்
‘ஒரே தீக்குச்சியில் மூன்றுபேர் சிகெரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின் கவனத்தை கவர அந்த நேரம் போதுமானதாக இருக்கும்’ என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாசகம் உலகெமெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.
காதலர்கள் பரிசு பொருட்கள் பரிமாரிக் கொள்வதில்
காதல்களைப் பொறுத்தவரையில் ‘பேனா பரிசளித்தால் இந்த காதல் முறிந்து போகும்’ என்று நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறிந்துவிடும் என்பது மேல்நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.
பூனை குறுக்கே வந்தால்:
எதிர்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் ‘பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது’ என்றும் சொல்வார்கள். இது இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானை குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம் என்று நம்பப்பட்டு வருகிறது. வீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் என்பது ஸபெயின் நாட்டு மக்களின் நம்பக்கைகளில் ஒன்று.
ஹவாய் தீவு மக்கள் நம்பிக்கை:
பணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும் அப்படிக் கொடுத்தால் அந்தப் பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கை.
காலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் வீட்டிற்குள் பேய் உலவும் என்பதும் கால்களை கதவுக்கு நேராக நீட்டிப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கைகளில் சில
‘கத்தியையோ தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும் போது நன்றி சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் கத்தியினால் ஏதேனும் காயம் படுதலும் தாவரம் பட்டுபோவதும் தவிர்க்க முடியாது’ என்பதும் அெமரிக்கர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தியை பெற்றுக் கொள்ளும்போது கொஞ்சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.
‘ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுபார்த்தால் இறந்துபோனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும் வலது கால் ஆணியை முதலில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும்’ என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கைகளில் சில.
வலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகின்றன. வலது புறமாக எழும்புதல் வலது காலை முதலில் வைத்தல் என்பதும் அவற்றில் சில பைபிளிலும் இயேசு நல்லவர்களை வலதுபக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.
கழிப்பறைக்குச் செல்லும்போது இடதுகாலை முன்வைப்பதும் கழிப்பறையிலிருந்து வெளியே வரும்போது வலதுகாலை முன்வைப்பதும் நன்மை பயக்கும் என்னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுகளில் நிலவுகின்றன.
இரவில் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாகவே எழும்புதல் நன்மை பயக்கும் என்பது ஏமன் நாட்டவரின் நமபிக்கை ‘படுத்திருக்கும் யாரையும் தாண்டிபோகாதே அப்படித் தாண்டிப்போனால் அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும்’ என்பது பாட்டி சொன்ன கதை மட்டுமல்ல அெமரிக்காவில் உலவும் கதையும் கூட
முடிவுரை
மூடநம்பிக்கை நம் நாட்டிற்கு மட்டுமா சொந்தம் உலக நாடுகளுக்கே சொந்தம் என பெரியார் சொன்னது போல மூடநம்பிக்கைகள் பல்வேறு வடிவங்களில் மாற்று உருவம் பெற்று விஞ்ஞான கணினி யுகத்தில் புதிய வடிவம் பெற்று புற்றீசல் போல் வளர்ந்து கொண்டுள்ளது. அறிவியல் புதுமைகளைப் பற்றி சொல்ல வேண்டிய கணினி ஆருடம் கணிக்க பயன்படுகிறது. அவித்து அல்லது ஆம்லெட் செய்து சாப்பிட வேண்டிய முட்டை மாந்திரீக செயல்களுக்கு பயன்படுகிறது. வயிற்றில் நிறைந்துள்ள உணவு பொருள்களை சிதைத்து ஜீரணமாக்கும் எலுமிச்சை சாறு பிழியப்படாமலே திருஷ்டிப்பொருளாகவும் வாகனங்களின் சக்கரத்தில் நசுக்கப்படும் மாலைகளாக கோர்க்கப்பட்டும் விரயமாக்கப்படுகிறது.
பெரிய அளவிலான கற்பூரக் கட்டிகள் பரப்பி வைக்கப்பட்டுள்ள தயிர் சாதத்தின் நடுவே கொளுத்தபட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வளவு ஏன் உயிருள்ள சேவலின் இரத்தத்தை அதன் கழுத்துப் பகுதியை கடித்து பூசாரி குடிக்கின்றார். இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயல்களிலிருந்து மனிதனை மீட்டெடுக்க வேண்டும். மேலும் இத்தகு பல்வேறு வடிவிலான மூடநம்பிக்கைகளை விட்டொழித்து அறிவியல் மனப்பான்மையினை விதைத்து விலாங்காண்டித் தனத்திலிருந்து மனித சமுதாயத்தை பகுத்தறிவு கொண்டு மீட்டெடுப்போம்.