ஒசாகா,மே27- ஜப்பானில் ஒசாகா மாகாணத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எனக்கு ஜப்பான் புதிதல்ல. உங்களுக்கு நானும் புதியவனல்ல. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற் காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத் துப் பார்க்கிறேன்.
மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.
அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை. 2010-ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை கூட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது நான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந் தேன்.
ஜப்பான் நாட்டின் பொருளா தாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மசாயூகி நாஷிமா அப்போது சென்னைக்கு வருகை தந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் அலுவலகத்தை அப் போது அவர் திறந்து வைத்தார். இப்படி ஒரு அலுவலகத்தை சென்னை யில் நீங்கள் திறக்க வேண்டும் என்று முதன்முதலாக கோரிக்கை வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தான். அதனை ஏற்று அந்த அலுவலகம் சென்னையில் திறந்து வைக்கப் பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 840 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி நிறுவனங் களை நடத்தி வந்தன.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 170 நிறுவனங்கள் தங்கள் தொழிற் சாலைகளை நடத்தி வந்தன. அதற்கு ஒரு அலுவலகமாக அப் போது திறந்து வைக்கப்பட்டது.
அதில் பேசும்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
அப்போது பேசிய ஜப்பான் அமைச்சர் மசாயூகி நாஷிமா, “சென்னை என்பது ஆசிய நாடுக ளின் நுழைவாயிலாக அமைந் துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அதே, ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.