தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 17.9.2025 அன்று கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும்,
தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், அண்ணா விருதினை சுப. சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருதினை சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் விருதினை நினைவில் வாழும் குளித்தலை சிவராமன் அவர்களின் சார்பாக அவரது துணைவியாரிடமும், பேராசிரியர் விருதினை மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க. ஸ்டாலின் விருதினை பொங்கலூர் நா. பழனிசாமி அவர்களுக்கும், முரசொலி அறக்கட்டளையின் சார்பில் முதன் முறையாக முரசொலி செல்வம் விருதினை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், தி.மு.கழகப் பொருளாளாரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
அய்.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் பெருமக்கள், இந்நாள், மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தி.மு.கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை தி.மு.கழக நிருவாகிகள், மாவட்ட தி.மு. கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிருவாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.