ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா மிகுந்த சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூக சீர்திருத்தப் பணிகள் குறித்து உரையாற்றினர். மேலும், கவிதை, கட்டுரை, வினாடி- வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் உரையாற்றியபோது, பெரியார் காட்டிய சமத்துவம், கல்வி, அறிவு ஆகிய பாதைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றார். இறுதியில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (17.9.2025)