தென்காசி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினரும் – மேல மெய்ஞ்ஞானபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடும்பம் குடும்பமாக தந்தை பெரியாரின் கொள்கை வழி ஈர்த்து, அந்த வட்டாரத்தை கழகக் கோட்டையாக மாற்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தவரும், மின் வாரியத்தில் பணியாற்றியவரும், பணியாற்றிய இடங்களில் எல்லாம் கொள்கைப் பணியாற்றியவரும், தென்காசி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் டேவிட் செல்லதுரையின் அண்ணனுமாகிய மானமிகு
சீ. தங்கதுரை (வயது 77) இன்று அதிகாலை (19.9.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
‘வாழ்வியல் சிந்தனையில்’ (7.7.2021 , ‘விடுதலை’) அவர் தம் சிறப்பைப்பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.
அவர் இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கே பேரிழப்பாகும்.
மறைந்தும் மறையாமலிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக அவரது உடல் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது என்பது பாராட்டுக்குரியது.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் சீ.தங்கதுரைக்கு வீர வணக்கம்!
சென்னை தலைவர்,
19.9.2025 திராவிடர் கழகம்
குறிப்பு: பெரியார் பெருந்தொண்டர்
சீ. தங்கதுரை மறைவுக்கு அவரது சகோதரர் டேவிட் செல்லதுரையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தமிழர் தலைவர் இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.