தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் அண்ணா மகிழ்நன் மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர். கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி தலைமையில் கழகத் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.