பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போக வேண்டிய தூரத்துக்குப் போய் அடைய வேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல, அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமோ அதையடைந்தே தீரும்; அதில் அய்யம் யாருக்கும் இல்லை.
– அறிஞர் அண்ணா
(திருச்சியில் 17.9.1967 அன்று நடைபெற்ற
பெரியார் பிறந்தநாள் விழா சொற்பொழிவிலிருந்து)