பெரியார் உலகத்திற்கே ஒரே மருந்து பெரியாரின் கருத்துகள்தான்!
பெரியார் கூறுவது எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒருவன் சுயமரியாதையோடு தன்மானத்தோடு வாழ எந்தக் கருத்து எவ்வளவு உதவுகின்றதோ, அதைப் பொறுத்துத்தான் அந்த மதிப்பு இருக்க வேண்டும்.
நம்முடைய வேதம், இதிகாசம், புராணங்கள், குரான், பைபிள் முதலியவற்றை மூட்டைகட்டி மூலையில் வைத்துவிடுங்கள்!
இவை எல்லாவற்றையும் விட உங்கள் சுய சிந்தனைப்படி நடவுங்கள், அதுதான் உங்களுக்கு வழிகாட்டும்!
இந்த உலக மக்களுக்கு தந்தை பெரியார் கொடுக்கும் புத்திமதியானது – மதம், மொழி, இனம், நிறம் முதலிய, மனிதனைப் பிரித்து வைக்கும். இவற்றை உடைத்து எறிய வேண்டும் என்று உலகிற்கு அறிவித்து உள்ளார். உலக மக்களின் கஷ்டத்திற்கு ஒரே மருந்து பெரியார் அவர்களின் கருத்துப் பிரச்சாரம்தான்.
– ஆந்திர நாத்திக அறிஞூர் கோரா,
‘விடுதலை’, 15.11.1972