புதுடில்லி,மே 28 – எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் சாதாரண கடவுச்சீட்டு பெற 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குநர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ள தாக, பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, 2013இல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் உள்ளிட்டோருக்கு 2015 இல் பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், ‘மோடி’ எனும் ஜாதியி னரை அவ தூறாக பேசியதாக தொடரப் பட்ட வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து சிறப்பு கடவுச்சீட்டை (ஞிவீஜீறீஷீனீணீtவீநீ றிணீssஜீஷீக்ஷீt) ஒப்படைத்த ராகுல், சாதாரண கடவுச்சீட்டு கேட்டு, டில்லி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சாதாரண கடவுச்சீட்டு வழங்க நீதிமன்றத்தின் அனு மதி மற்றும் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிபதி வைபவ் மேத்தா,‛‛ பயணம் மேற்கொள்வது அடிப் படை உரிமை. அனுமதி பெறாமல் பல முறை பயணம் மேற்கொண்ட ராகுல் நடமாட்டத்திற்கு நீதிமன்றம் எந்த தடையும் விதித்தது இல்லை. 2015 இல் ராகுலுக்கு பிணை வழங்கப்பட்ட போது, அவர் பயணம் மேற்கொள்ள எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
இதனால், ராகுலின் மனு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், 10 ஆண்டு களுக்கு அல்லாமல் 3 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.