டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பு உணர்வே திராவிட இயக்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் சட்டவிரோத நடைமுறை கண்டுபிடிக்கப் பட்டால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.
* வக்பு வாரியத்திற்கு சொத்து வழங்க 5 ஆண்டு இஸ்லாமை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்துக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்கவும் மறுப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஹிந்து மதத்தில் சமத்துவம் கிடையாது, என்ற கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்துக்கு கருநாடக தகவல் தொழில்நுட்பம்/உயிரி தொழில்நுட்ப அமைச்சர் பிரியங் கார்கே ஆதரவு. சீக்கியம், சமணம், பவுத்தம் மற்றும் லிங்காயதம் அனைத்தும் இந்தியாவில் தனித்தனி மதங்களாக இந்தியாவில் பிறந்தன, ஏனெனில் ஹிந்து மதத்தில் அவற்றிற்கு (ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு) இடம் இல்லை, அது அவர்களுக்கு கண்ணியமான இடத்தை வழங்கவில்லை, ”என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கார்கே கலபுர்கியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எகனாமிக் டைம்ஸ்:
* அதானிக்கு 1050 ஏக்கர் கொடை: பீகார் மாநிலத்தில் பாஜக தோல்வியடையும் என்பதால், இப்போதே பாகல்பூரில் 1,050 ஏக்கர் நிலம் அதானிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி இந்து:
* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
– குடந்தை கருணா