பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும்
ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி!
கந்தர்வக்கோட்டை, செப்.16 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர் அ.ரகமதுல்லா பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந் தோறும் ரூ.2000 வழங் கும் அன்புக்கரங்கள் திட் டத்தை வரவேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, கலைவா ணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதி யாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கிடும் “அன்புக் கரங்கள்” திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட் டம், வறுமையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியை உறு திப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.
தமிழ்நாடு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட ஆட்சியில் அரசு பள்ளியை மேம்படுத்தக்கூடிய வகையில் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் அன்புக் கரங்கள் திட்டத் தால் குழந்தைகள் எதிர் காலத்தில் நம்பிக்கை யோடு வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து செயல் படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ் சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள் கிறோம்.