1.காலை 7 மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
- காலை 8 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
- காலை எட்டு முப்பது மணி அளவில் இளைஞர் அணி சார்பில் அண்ணா மேம்பாலம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
- காலை எட்டு முப்பது மணி அளவில் அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
- முற்பகல் 10 மணி அளவில் பெரியார் மய்யம் பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது.
- முற்பகல் 11 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்சு அவுசு பகுதியில் பெரியார் படம் வைத்து இனிப்பு வழங்கல்.
- நண்பகல் 12.00 மணி அளவில் மந்தைவெளி வன்னியம்பதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு.
- மாலை 6 மணி அளவில் எம் ஜி ஆர் நகரில் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம்.
மாவட்ட கழகத் தோழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– மாவட்டத் தலைவர், செயலாளர்