ராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன் என்று சுயமரியாதை இயக்க படைத்தளபதிகளுள் ஒருவரான ராமச்சந்திரனார் பிறந்தநாள்
ஜாதிப்பெயரை நீக்கி புரட்சி செய்த சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்த நாள் 16.09.1884
சிவகங்கை இராமச்சந்திரனார் (செப்டம்பர் 16.091884) வழக்குரைஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும் ஜாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும் தென் தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர் ஆதி திராவிடர்களும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார் 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுய மரியாதை இயக்க மாநாட்டில் தம் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி ரீதியான அடையாளத்தை தமது சேர்வை என்ற பட்டத்தை துறப்பதாக அறிவித்து அந்நாளிலிருந்து சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அவர் மக்களால் அறியப்பட்டார்..
அந்த காலத்தில் கோவில்களிலும் அக்கிரக்காரத் தெருக்களிலும் நுழையவும் நடக்கவும் முடியாத சூழ்நிலை நிலவியது இருப்பினும் சிவகங்கை இராமச்சந்திரன் இராமநாதபுரம் தேவஸ்தானக் கமிட்டியில் தலைவர் பதவியில் இருந்தபோது பி. எஸ். சிதம்பரம் (நாடார்) என்ற நாடார் இனத்தவரை உறுப்பினராக அமர்த்தினார் 1932 ஜூன் திங்களில் அவர் நோய்வாய்ப் பட்டபோது வி. வி.இராமசாமி என்ற நாடார் இனத்தவரை தாம் வகித்த தலைவர் பதவிக்கு தேவஸ்தானம் கமிட்டி சிறப்புக் கூட்டத்தை கூட்டி தேர்ந்தெடுக்கச் செய்தார்.
1930 அக்டோபரில் நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்க அழைப்பு வந்த போதும் அதனை ஏற்காமல் சுய மரியாதை இயக்கப் பணியில் முழுமையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்.
பெரியாரின் கொள்கைகளும் ராமச்சந்திரரின் செயல்பாடும்
பெரியார், தமிழ்நாட்டில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் ஒழிக்கப் பாடுபட்டார். அனைத்துச் சமூகத்தினருக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. பெரியாரின் இந்த இலட்சியங்களை நிறைவேற்ற ராமச்சந்திரர் உறுதுணையாக இருந்தார். அவர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு போன்ற கொள்கைகளை ஆதரித்ததுடன், அவற்றைச் செயல்படுத்தவும் முன்வந்தார்.
பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளில் ஒன்று, அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது. இக்கொள்கை, ஜாதி அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படும் பாரம்பரியத்தை எதிர்த்து, ஹிந்து மதத்தில் சமூக சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றது. இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ராமச்சந்திரனார் முக்கியப் பங்கு வகித்தார். இந்தச் சீர்திருத்தத்தை அமல்படுத்த அவர் ஆற்றிய பணிகள், பெரியாரின் கனவை நனவாக்கியது.
அவரது தொடர்ச்சியான முயற்சிகளாலும், உறுதியான நிலைப்பாட்டாலும், சமூக நீதிக்கு எதிரான சக்திகளை அவர் எதிர்கொண்டார். பெரியாரின் கொள்கைகள் பல விமர்சனங்களைச் சந்தித்தாலும், ராமச்சந்திரனார் ஒருபோதும் அவற்றிலிருந்து பின்வாங்கவில்லை. அவர், சமூகநீதியை ஒரு அரசியல் முழக்கமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதினார்.