ஜெயங்கொண்டம், செப்.16- ஜெயங் கொண்டம்
பெரியார் பள்ளியில் 13.9.25 அன்று உணவு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் ஆரோக்கியம், சத்தான உணவு பழக்கவழக்கம், பாரம்பரிய உணவுகளின் முக்கியம் ஆகியவற்றை எடுத்துரைப்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.
இவ்விழாவினை பள்ளியின் முதல்வர் துவக்கி வைத்து உடல் நலம் காக்கும் உணவு ஆகவே மாணவர்கள் சத்தான ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும் என எடுத்துரைத்தார் விழாவில் மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பாரம்பரிய உணவுகள், ஊட்டச்சத்து உணவுகள்,காய்கறிகள், பழச்சாறு, சிற்றுண்டிகள் எனப் பல வகை உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இவ்விழா மாண வர்களுக்கு ஆரோக்கிய உணவின் அவசியத்தை புரிய வைத்ததோடு பாரம்பரிய உணவுகளை அறிந்து மதிக்கும் மனப்பாங்கையும் பகிர்ந்து உண்ணும் பண்பையும் வளர்த்தது.