வல்லம். செப்.16- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) முதலாண்டு பயிலும் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் பேரா சர்மிளாபேகம் உரையாற்றுகையில் மாபெரும் தத்துவ மேதை இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றோம். நல்ல ஆசிரியர் என்பவர் அறிவு தேடலில் மாணவர்களுடன் சகபயணியாக பணிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் தலைமையுரை உரையாற்றும் போது ஆசியர்களாகிய நீங்கள் தனித்துவம் வாய்ந்த திறமை மூலமாக பட்டை தீட்டப்படாத திறன்களை பயனுள்ளதாக மாற்றுவதன் மூலமாக சமூதாயம் சீர்படுகிறது மற்றும் கணிதம், வேதியில் இயற்பியல் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
வாழ்க்கை கல்வி
இதனைத்தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) பல் கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா வாழ்த்து ரையாற்றும் போது எப்படி ஒரு மாணவனை மாற்றி அதனுடைய வெளிப்பாடாக தேர்வு செய்து உங்களுக்கு ஒரு மரியாதையை செலுத்தவேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்ககூடிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். தந்தை பெரியார் அவர்கள் படிப்பு வேறு அறிவு வேறு என்று சுட்டிக்காட்டியும் ஆசிரியர் அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறும்போது படிப்பை மட்டும் கொடுப்பது கல்வி அல்ல அதனோடு வாழ்க்கை கல்வியும் கற்று கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு கூறுவார்கள்.
அறிவியல் மனப்பான்மை
தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் அவர்கள் உரையாற்றும் போது அறிவியல் மணப்பாண்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மய்யங்களின் பெயர் இங்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் பெரியார் அவர்கள் படிப்பு வேறு அறிவு வேறு என்று கூறுவார்கள் அதற்கு உதாரணமாக அறிவியல் அறிஞர்கள் தாமஸ் ஆல்வாய் எடிசன், அய்ன்ஸ்டின், மேரிக்யூரி, ஆகியோரின் அறிவியல் கண்டுப்படிப்புகளை பற்றி எடுத்துரைத்தார். மேலும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் அவர்கள் மரக்கன்றை பரிசாக அளித்தார். நான் 18 வருடங்களுக்கு முன் இப்பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிப்பார்ப்பதற்கு வருகை புரிந்தோம் அப்போது முன்னாள் துணைவேந்தர் பேரா நல்.இராமச்சந்திரன் அவர்கள் எங்களுக்கு ஒரு செஞ்சந்தன மரக்கன்றை பரிசாக வழங்கினார். அது இன்று எங்களது இல்லத்தில் உயர்ந்து நிற்கிறது. எங்களுக்கு செஞ்சந்தன மரத்தினை அன்று தான் மேனாள் துணைவேந்தர் அவர்கள் அதனின் மதிப்பினை பற்றி கூறினார். இன்று அவருடைய நினைவு நாளில் நாங்கள் நினைவுகூறுகிறோம்.
இந்நிகழ்வில் 107 ஆசிரிய பெருமக்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. இறுதியாக பல்கலைக்கழக அறிவியல் துறை முதன்மையர் பேரா விஜயலெட்சுமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் சர்மிளாபேகம் மற்றும் துணை இயக்குநர் முனைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கல்வியல்துறை தலைவர் பேரா தமிழ்வாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.