சாப்பாடும் கூட்டுறவு முறைதான். ரஷ்யாவில் ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு வேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்கு அதிகமாய் போட்டுச் சமைப்பதும், 4 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் கூட ஒரு பெண்ணை கடுமையாகச் சமையலுக்கென்று ஏற்படுத்திக் கொண்டபோதும், ஒவ்வொரு குடும்பத்திலும் சமையலுக்கு என்று ஒரு தனி அறை, பாக்கி வசதிகளுக்கென்று கொள்ளை கொள்ளையான இடமும் ஒதுக்கி வைத்துக் கொண்டு அக்கிரமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருக்கிறோமா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’