காஞ்சிபுரம், செப்.15- காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதி யோர் இல்லங்கள் நடத்து வதற்கு மற்றும் பராமரிப்பதற்கு தகுதி வாய்ந்த அரசு சாரா தன் னார்வ தொண்டு நிறுவனங் களை தேர்வு செய்ய விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிரு ப்பதாவது; தமிழ்நாடு சுட்டு மானத் தொழிலா ளர்கள் நல வாரியத் தில் உறுப்பினராக இருந்து, 60 வயது பூர்த்தி அடைந்து, குடும் பத்தினரால் சரியான கவனிப்பும், பராமரிப்பும் இல்லாமல் சிரமப் படும், கட்டுமானத் தொழிலா ளர்கள் தலா 50 நபர்கள் தங் கும் வகையில் உணவு மற்றும் -உறைவிட வசதிகளுடன் 2 முதி யோர் இல்லங்கள் முறையே காஞ்சிபுரம் மாவட்டம் எழிச் சூரிலும், செங்கல்பட்டு மாவட் டம் தையூரிலும் செயல்படும்.இம்முதியோர் இல்லங் கள் நடத்துவது மற்றும் முறையாக பராமரிப்பது போன்ற செயல் பாடுகள் சமூக நலத்துறை மூலம் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முதியோர் இல் லங்கள் நடத்துவதற்கு மற் றும் பராமரிப்பதற்கு தகுதி வாய்ந்த அரசு சாரா தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக் கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
