பாலியல் உணர்வும் பல்வேறு நோய்களும்

5 Min Read

மரு.நா.மோகன்தாஸ்

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையி்ன் மேனாள்  தலைவர்

பல்வேறு நோய்களும் இன்றைய வாழ்க்கை முறையில் இளம் வயதிலேயே சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகப் பிரச் சனை போன்ற பல்வேறு நோய்களின் பிடியில் வாழ வேண்டியுள்ளது. ஆனால் ஆசையும், உணர்வுகளும் மறைந்து விடுவதில்லை. நோய் குறித்த பயமே வாழ்க்கையில் நிம்மதியையும், இன்பத்தையும் முடக்கிவிடக் கூடாது என்பதற்காக இங்கே சில செய்தி களைப் பார்ப்போம்.

ஆண்மைக்குறைவு ஏற்படக் காரணம்:  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக, நிலையாக இல்லை யென்றால் பாலியல் குறைபாடுகள் வரலாம். சர்க்கரை நோய் இரத்தக் குழாய்களை நேரடி யாக பாதிக்கக் கூடியது. அவ் வாறு பாதிக்கின்றபோது ஆணுறுப்பிற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் குைறகிறது அல்லது தடைபடுகிறது. இதன் விளைவாக ஆண்மை குறைவு ஏற்படலாம். அது போன்றே நரம்பு மண்டலத்தையும், நரம்புகளையும் பாதிப்பதால் உணர்வு நரம்புகளின் செயற்பாட்டில் குறைவு ஏற்படலாம். இது பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.

சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்காதவர்கள், புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், போதைப் பழக்கத்திற்கு ஆளான வர்களுக்குக் கண்டிப்பாகப் பாதிப்புகள் ஏற்படும். சர்க்கரை நோயுடன் பிற நோய்களுக்கும் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு அதனால் ஏற் படுகின்ற பின் விளைவுகளினால் ஆண்மைக் குறைவு ஏற்படலாம். இந்த வயதில் நமக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டதே, நம்மால் இனி இல்லறத்தில் ஈடுபட முடியுமா? என்ற கவலையும், தாழ்வுமனப் பான்மையுமே ஆண்மை குறைவேற்பட முக்கியக் காரணமாக அமைந்து விடுகின்றது.

ஓரிருமுறை ஆண்குறி விரைப்பு ஏற் படாமல் போவதாலேயே,அல்லது ஓரிரு முறை விந்து விரைவாக வெளியேறி விடுவதாலேயே ஆண்மைக்குறைவு ஏற்பட்டு விட்டது என்று நினைக்க வேண்டாம். விடியற்காலை வேளையில் ஒருவருக்கு ஆண்குறி விரைப்பாக இருந்தாலே அவர் ஆண்மையுடன் இருப்பதாக அர்த்தம். சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு பிறப்புறுப்பில் சுரக்கும் உராய்வு திரவத்தின் சுரப்பளவு குறைவாக இருக்கும். இதனால் உடலுறவு கொள்வது கடினமாகவும், உச்சகட்டப் பரவசமடைவதில் சிரமமாகவும் இருக்கும். அத்துடன் பிறப்புறுப்பில் நமைச்சல் உண்டாகி உறவில் உள்ள இன்பத்தைக் கெடுத்து, இனி இது வேண்டாம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். எனவே, சர்க்கரை நோயுள்ள ஆண், பெண் இருபாலரும் இரத்தத் தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக, நிலையாக வைத்துக் கொண்டால் சர்க்கரை நோயிலும் சந்தோஷமான வாழ்வினை வாழ பழகிக் கொள்ளலாம்.

இதயநோயுள்ளவர்கள்: இதயம் பாதிக்கப்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் மனதில் பயமும் கவலையும் உண்டாகிவிடும். அத்துடன் தொடர்ந்து பல விதமான மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு தாம்பத்தியத்தில் இயல்பாகவே ஈடுபாடு குறைந்துவிடும். பெண்கள், தங்கள் கணவனுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருக்கும் போது, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயஉணர்வின் காரணமாகத் தாம்பத்திய உறவினை தவிர்ப்பார்கள் அல்லது நாட்டம் கொள்ள மாட்டார்கள். இதய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பாதிப்பின் தன்மையினைப் பொறுத்து இரத்தக் குழாய்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த வலை கயில் ஆணுறுப்பில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அதனுடைய இரத்த ஓட்டம் சீராக இல்லாதிருக்கும் நிலையில் விரைப்புத் தன்மை குறைந்து அதனுடைய செயல்பாடுகளில் திறன் குறைந்து இதய நோயாளி களுக்கு பாலியல் பிரச்சனை உண்டாகி விடுகின்றது. பொதுவாக உடலுறவில் ஈடுபாடில்லை எனில் அவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு என்று மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அத்துடன் நீரிழிவு நோயுள்ள வர்களிடமும், தொடர்ந்து புகைபிடிப்பவர்களிடமும் இப்பிரச்சினை அதிக அளவில் காணப்படுகிறது.

இரத்தக் கொதிப்பிற்கான பல்வேறு மாத்திரைகளின் பின்விளைவுகள் ஆணுறுப்பினை சோர்வடையச் செய்யக்கூடியதாக உள்ளது. அத்துடன் உடலில் சக்தி குறைவாகி விடுவதும், மனஉளைச்சலும் கூட ஆணுறுப் பின் செயல்திறனைக் குறைத்து விடுகின்றன. பொதுவாக உடலுறுவின் போது அதிக அளவில் பிராணவாயு தேவைப்படும். எனவே இதய நோயாளிகள் சாதாரணமாக நடக்கும் போதோ அல்லது மாடிப்படிகளில் ஏறி இறங்கும் போதோ மூச்சிறைக் காமல், நெஞ்சுவலி ஏற்படாமலும் இருந்தால் அவர்கள் தாராளமாக தாம்பத்திய உறவில் ஈடுபடலாம். இரவு சாப்பிட்ட உடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது.

ஆண்மை குறைபாட்டினைப் போக்குவதற்காக என்று விற்கப்படும் மாத்திரைகளை சாப்பிடக்கூடாது. அது பக்க விளைவுகளையும், பாதிப்பினையும் உண்டாக்கிவிடும்.

நைட்ரோகிளிசரின் மாத்திரை அல்லது களிம்பை மருத்துவரின் ஆலோசனையின்படி எப்போதும் கைவசம் வைந்திருப்பது நல்லது. உடலுறவின்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதய நோயாளிகள் தங்களது பாலியல் பிரச்சனைகள் குறித்து மருத்துவரிடம் மனம் விட்டு ஆலோசிக்கலாம். அப்படி செய்வது மன இறுக்கத்தையும், மனஉளைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். இன்பயமான இல்லத்திற்கு இதயத்தின் முழு ஒத்துழைப்பு அவ சியம் என்பதை இதய நோயாளிகள் மனதில் கொள்ள வேண்டும்.

இரத்தக்கொதிப்பு நோயாளிகள்: உடலுறவின்போது இரத்தஅழுத்தம் அதிகரிக்கின்றது. அதிக இரத்த அழுத்த முள்ளவர்கள் உடலுறவு கொள்கின்றபோது இரத்த அழுத்தம் இன்னும் கூடுதலாகி இதயம், மூளை ஆகியவற்றை பாதிக்கக்கூடும். இவர்கள் புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் கண்டிப்பாக நிறுத்திவிடவேண்டும். இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்காக சாப்பிடுகின்ற சில மாத்திரைகள் பாலியல் செயல்பாட்டில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இவர்கள் நல்ல உணவு, மன அமைதி, தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்வுக்கும், அமைதியான பாலியல் உறவுக்கும் வழிவகுக்கலாம்.

சிறுநீரகப் பிரச்சினை : சிறுநீரகம் சீராகவும், முறையாகவும் வேலை செய்யவில்லை என்றால் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் யூரியா, கிரியாடினின் ஆகியவை அதிகமாகி பல்வேறு இன்னல்களைத் தருகின்றன. இதனால் ஆண்களுக்கு ஆண்குறியின் விரைப்புத்தன்மை குறைவு ஏற்பட்டு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகும். பெண்
களுக்கு மாதவிலக்கு முறையாக வராத நிலையும், இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டு உடல் சோர்வும், மனத் தளர்ச்சியும், மன உளைச்சலும் ஏற்பட்டு உடலுறவில் நாட்டமின்மை உண்டாகும். இவர் களுக்கு இரத்தச் சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடுமா என்றால், இல்லை சரியாகாது? என்பதுதான் உண்மை. எனவே, சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய எந்தச் செயலையும் நாம் செய்யக்கூடாது. சிறுநீரகங்களைக் காத்தால் சீரிய, இனிய வாழ்வு வாழலாம்.

இன்று யாரைக்கேட்டாலும் மூட்டுவலி, இடுப்புவலி என்று புலம்புவது சாதாரணமாக உள்ளது. இந்தவலிகள் உடலுறவின் போது உண்டாகும் அசைவுகளுக்குத் தடையாக அமைந்து விடுவதால். இவர்கள் முயற்சிக்கும் போது வலியின் வேகம் அதிகமாகி இனி இந்த உறவே வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிடுவார்கள்.

மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவை பாலுறவுக்குத் தடையாக இருக்காது. இவர்கள் பொறுமையும், செயலில் நிதானமும் கொண்டால் மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்தலாம். அதிவேகமான, ஆவேசம் நிறைந்த உடலுறவு செயல்பாடுகள் சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும் என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *