மாத்தூர், மே 29 தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாத்தூர் கிராமத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் 25.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
புரட்சிக்கவிஞர் கலைக்குழு சார்பில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேல், மகளிரணித் தோழர் கலைச்செல்வி ஆகியோர் இயக்கப்பாடல்களை பாடினர்.
தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா. அரங்கராசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந் தூரபாண்டியன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, கழகக் காப்பாளர் வெ.ஜெய ராமன், தலைமை கழக அமைப்பாளர் க.குருசாமி, கழக ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்
இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி வைக்கம் போராட்ட வரலாற்றை எடுத்து கூறியும், ‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்பதை விளக்கியும் எழுச்சிமிகுந்த உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி இக்கூட்டத்தினை ஒருங் கிணைத்து நடத்தினார். இறுதியாக மாவட்ட தொழிலாளரணி துணை செயலாளர்
இரா.இராதா அனைவருக்கும் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் குடந்தை மாவட்ட செய லாளர் உள்ளிக்கடை சு.துரைராசு, குடந்தை மாவட்ட கழக அமைப்பாளர் வ.அழகுவேல், தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந் திரன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண் ணன், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் மு.விவேகவிரும்பி, தொழிலாளரணி தஞ்சை மாவட்ட பொருளாளர் மு.இரமேஷ் மாத்தூர் கிளைகழக தலைவர் நா.முனியப்பன்,
திருவையாறு நகர தலைவர் கவுதமன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், ஊர் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.