இன்று (14.9.2025) காலை சென்னை பெரியார் திடலுக்குத் தோழர்களோடு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் வேம்புலி வெங்கடேசன், ஏ.அய்.டி.யு.சி. வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் சந்தோஷ்குமார், மாவட்டத் துணை செயலாளர் ஜி.சுப்பிரமணி, வட்டசெயலாளர் பார்த்திபன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் உடன் வருகை புரிந்தனர். திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேசு, வட சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் உள்ளிட்ட தோழர்கள், வட சென்னையிலிருந்து பிறந்து, வளர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.