சென்னை, செப்.14 சென்னை சூளை மேட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று (13.9.2025) நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், தோழர் மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற இரா.முத்தரசன், தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் மு.வீரபாண்டியன் அவர்களுக்கு நேற்று மாலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.உரியவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.