சென்னை, செப். 14- அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஊழியர்கள் நல சங்கத்தின் 18 ஆவது ஆண்டு மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் 7.9.2025 அன்று நடை பெற்றது.
கருத்தரங்கம்
அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஊழியர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த 18ஆம் ஆண்டு மாநாட்டை முன்னிட்டு மண்டல் ஆணைய பரிந்துரைகள் மற்றும் இட ஒதுக்கீடு கொள்கையில் தற்போதைய நிலை குறித்தான கருத்தரங்கம் நடை பெற்றது.
கலி.பூங்குன்றன்
இதில் சிறப்பு அழைப்பாளர் களாக கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், டி.கே.எஸ்.இளங்கோவன்,மூத்த வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழு உறுப்பினருமான கருணாநிதி, கழக பொருளாளரும் மேனாள் அய்ஓபியன் வீ.குமரேசன், ஓபிசி வாய்ஸ் ஆசிரியர் குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான வாயூறு தோளிபங்கன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்தரங்கில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தான தங்களின் கருத்துக்களை பதிவு செய்து சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்த நிகழ்வின் போது சங்கத்தின் பணித்தலைவர் ரவீனா விஜயகுமார், துணைத் தலைவர் நாகராஜன், பொருளாளர் மணிமேகலை பழனியப்பன்.ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி சிபிசிஎல், அய்சிஎப், வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு ஓபிசி நல சங்கங்களின் நிர்வாகிகள், அய்ஓபி வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர்கள், மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.