அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு பிஜேபி தான் காரணம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, செப்.13- இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி (11.9.2025), சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உருவப்படத்திற்கு அக்கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை யில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்து ஆடுகிறது. ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தனியாக உளவு கண்காணிப்பு பிரிவை உருவாக்க வேண்டும். அ.தி.மு.க.வில் குழப்பம் நிலவுவதற்கு பா.ஜனதா தான் காரணம். சசிகலாவால் செயல்படமுடியாமல் போனதற்கும், ஓ.பன்னீர்செல்வம் தனிமையாக செல்வதற்கும், டி.டி.வி. தினகரன் தனிக்கட்சி தொடங்கியதற்கும் யார் காரணம்?. செங்கோட்டையன் அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்படுவதற்கு யார் காரணம் என்றால் இதற்கு எல்லாம் ஒரே பதில் பா.ஜனதாதான்.
அ.தி.மு.க. தலைவர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *