சென்னை செப் 13 கடந்த நான்கு ஆண்டுகளில் 18.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் இதுவரை 770 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டத்தில் 22 லட்சம் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்களால் 8 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பயனடைகின்றன. உங்களுடன் முதலமைச்சர் திட்டம் முகாமில் பெறப்பட்ட மனுக்களில், 40% மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி பெறப்பட்டுள்ளன. விடுபட்ட மற்றும் தகுதியான மகளிருக்கு உதவித்தொகை நிச்சயம் வழங்கப்படும். என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்:
ரஷ்யா திட்டவட்டம்
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறி வித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே அமை தியை நிலைநாட்ட, டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்த நிலையில், இப்போதைக்கு அந்த வாய்ப்பே கிடையாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் இப்போதைக்கு நிற்க வாய்ப்பில்லை.