டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு விவகாரத்தில் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை கருநாடகாவில் சமூக – பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பு புதிதாக நடத்தப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். மேலும், 2015இல் மேற்கொள்ளப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் அவர் கூறினார்.
* பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல. வாக்குத் திருட்டு தான் தற்போது உள்ள முக்கிய பிரச்சினையாகும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
* செப்டம்பர் 16 முதல் பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேஜஸ்வி முடிவு.
புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டெட் தேர்வு விவகாரம்; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு! “இந்தத் தீர்ப்பு அதன் தற்போதைய வடிவத்தில் செயல்படுத்தப்பட்டால், அது பெருமளவில் கட்டாய ஓய்வுகளை தூண்டும், இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் முன்னோடி இல்லாத வகையில் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்” என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* நாடு முழுவதும் அல்லாமல், டில்லியில் மட்டும் ஏன் பட்டாசு வெடிக்கத் தடை? – பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, காற்று மாசு விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே கொள்கை வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து.
தி இந்து:
* உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காது: அரசியலமைப்புச் சட்டம், அதிகாரம் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால், உச்ச நீதிமன்றம் “சும்மா” இருக்காது என்றும் அதிகாரம் இல்லாமல் இருக்காது என்றும், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு.
* ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு ‘அய்ஸ்’ வைக்கும் மோடி: ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்தின் 75ஆவது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடியின் கட்டுரை சங்கத் தலைமையின் ஆதரவைப் பெறுவதற்கான “தீவிர முயற்சி” என காங்கிரஸ் விமர்சனம்.
– குடந்தை கருணா