டில்லியில் செங்கோட்டையில் உள்ள அரங்கத்தில் ஜெயின் சமூகத்தவரின் விழா ஒன்று செப்டம்பர் 4 முதல் 10 ஆம் தேதி வரை நடந்தது.
இந்த விழாவில் ஜெயின் சமூகத்தினர் பெரிய அளவில் கலந்து கொண்டனர். 9ஆம் தேதி நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம்பிர்லா கலந்து கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், மத்திய ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை நடத்திவரும் ஜெயின் சமூக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் பூஜைக்காக தங்கம் மற்றும் விலையுயர்ந்த வைர வைடூரிய நவரத்தினக் கற்கள் பதித்த கூஜா ஒன்றை வைத்திருந்தார். நாள் தோறும் பூஜைக்காக அதைக் கொண்டுவந்த அவர் 06.09.2025 அன்று முக்கிய விருந்தினர் ஒருவர் வருகை தந்ததால், அவரை கவனிக்கச் சென்ற போது, துறவி வடிவில் இருந்த ஒருவர் அந்த கூஜாவை தூக்கிச் சென்று விட்டார். கூஜாவின் மதிப்பு ரூ2 கோடி விலை மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது
மிகவும் பாதுகாப்பு மிகுந்த செங்கோட்டையில் இந்தத் திருட்டு நடந்தது; மேலும் நாடாளுமன்ற அவைத்தலைவர் வருகை போன்றகாரணத்தால் இந்த திருட்டு நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சிலையை ஜெயின் சாமியார் வேடத்தில் வந்து திருடிய நபர் குறித்த விவரம் தெரிய வந்தது.
கண்காணிப்புக் கருவியின் காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, அந்த நபர் அங்கிருந்து வெளியே வந்து ஆடை மாற்றிக் கொண்டு வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் சென்றதும் தெரிய வந்தது.
காவல்துறையினர் புதுடில்லி பேருந்து நிலையம் சென்று தப்பி ஓட முயன்ற கூஜா திருடனைக் கைது செய்தனர்.
அவர் உத்தரப் பிரதேசம் ஜாபூரைச் சேர்ந்த பூஷன் வர்மா என்பவர் ஆவார். இவர் விலை உயர்ந்த பொருட்களை நுணுக்கமாக மிகவும் திட்டமிட்டு திருடிச்செல்பவர் என்றும் தெரிய வந்தது.
மிகவும் பாதுகாப்பு மிகுந்த செங்கோட்டையில் திருடியவர் பார்ப்பனர் என்பதால் ஊடகங்கள் பெயரை வெளியிடாமல் விலை உயர்ந்த கூஜாவைத் திருடிய நபர் கைது என்று மிகவும் சிறிய செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
பார்ப்பனர்களின் இன உணர்வு எத்தகையது என்பதைப் பார்த்தீர்களா?
பார்ப்பான் திருடியிருக்கிறான். அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
ஆனாலும் வெளி உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது.
இதே திருட்டைப் பார்ப்பனர் அல்லாதவர் செய்திருந்தால் எப்படி எல்லாம் அளப்பறை செய்திருப்பார்கள்.
உண்மையைச் சொல்லப் போனால், அவர்களின் தத்துவமே உழைக்கக் கூடாது என்பதுதானே! உழைப்புக்கு அதிக இடம் இருக்கிறது என்பதால்தானே பயிர்த் தொழிலை பாவத் தொழில் என்கிறது மனுதர்மம் – காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அதை வழி மொழிகிறார்.
பிறர் உழைப்பைத் திருடி வாழ்பவர்களுக்குப் பெயர் திருடர்கள் தானே!