ஆதீனம் வந்த காலத்தில் சோழர் ஆட்சியே இல்லை என்கிற போது, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு எதற்கு இந்தக் கூத்து. அன்று பிரிட்டிசாரிடம் இருந்து இந்தியாவிற்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக ‘செங்கோல்’ தரப்பட்டது என்றால், இன்று யாரிடம் இருந்து அதிகாரம் மாற்றப்படுகிறது? எல்லாவற்றிலும் ஒரு ‘ஷோ’. தனக்குத் தானே முடிசூட்டிக் கொள் ளும் “ஷோ’. அவ்வளவுதான்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரதமருக்கு விமான நிலையத்தில் மக்கள் வரவேற்பு. சம்பந்தமே இல்லாமல், தமிழ் மொழி எல்லா மொழிகளை விட உயர்ந்த மொழி. இந்தியாவின் மொழி என பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அறிந்தவர்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் மவுண்ட் பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்துத் திரும்பப் பெற்று நேருவிடம் அளித்தாராம்!? முதலில் இது சோழர் காலத்து செங்கோல் என்று உருட்டினார்கள். பலரும் பதிலடி கொடுக்கவே மூக்குடைபட்டு இப்போது இந்த புது உருட்டு. ஆதீனம் நேருவிடம் செங்கோல் வழங்கிய போது மவுண்ட்பேட்டன் பாகிஸ்தானில் இருந்தார் என்ற தகவல் இப்போது தீயாய் பரவி வருகிறது. என்னமா உருட்டு ரானுங்கப்பா.
ஆதீனங்களுக்கு ஒரு வேண்டுகோள்! அடுத்த ஆண்டும் நீங்கள் கட்டாயம் டில் லிக்குப் போகவேண்டி வரும். செங்கோலை மோடியிடமிருந்து திரும்பப் பெறவேண்டி யிருக்கும். பயணத்திற்கு தயாராகுங்கள்!.
– கி.தளபதிராஜ்