வீட்டில் ஓய்வூதியதாரர் இருந்தால், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பலரும் நினைக்கின்றனர். அண்மையில் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுபவர்தான் உரிமைத் தொகை பெற முடியாது. அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய பெண் இருந்தால், ₹1,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதனால், நவம்பர் வரை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வருமான வரித் தாக்கல்!
2025-ஆம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய செப்.15 கடைசி நாளாகும். தாமதமாக தாக்கல் செய்தால், வட்டி, ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடைசி நாளில் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து, போர்ட்டர் சுமையால் பல ராலும் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். ஒரு வாரமே இருப்பதால் முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
