வெட்டிக்காடு, செப்.12- 4.9.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது . தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர்களை மகிழ்வித்தனர். குறிப்பாக ஆசிரியரை பற்றிய முகவுரையில் தொடங்கி, கவிதை ,பேச்சு ,நடனம், வகுப்பறை நிகழ்வுகள் போன்றவற்றை நிகழ்த்தி காட்டி ஆசிரியரை மகிழ்வித்தனர் மிகவும் வித்தியாசமாக ஒரு வகுப்பறை நாடகத்தின் மூலம் 90-களில் உள்ள மாணவர்கள் மற்றும் 2000-த்தில் உள்ள மாணவர்களின் இயல்புகள் , வகுப் பறையில் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை நடிப்பின் மூலம் தெளிவு படுத்தினர்.
இறுதியாக ஆசிரியர் அனைவருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களையும் அனைத்து ஆசிரிய பெருமக்களையும் இணைத்து நிழற்படம் பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்தினர். இறுதியாக முதல்வர் அவர்கள் அனைத்து மாணவர்களின் நிகழ்வுகளை எடுத்துக் கூறி பாராட்டி ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன் நன்றி கூறினார். இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
மரக்கன்று நடும் விழா
9.9.2025 அன்று என் தாய்க்காக ஒரு மரம் (அம்மா பெயரில் ஒரு மரம் நடுவோம்) நிகழ்வில் அம்மாவுடன் மாணவர்கள் மரக்கன்று நடும் விழா நிகழ்ந்தேறியது. நமது வெட்டிக்காடு பெரியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களின் குழந்தைகளுடன் மரக்கன்றுகள் நட்டும் முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் மரக்கன்றுகள் நடும் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. மற்ற மாணவர்கள் தங்களது அம்மாவுடன் மரக்கன்றுகளை நடும் ஒளிப்படத்தை பகிர்ந்தனர். இந்த நிகழ்வினை அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் அரசின் இணையதளத்திற்கு அனுப்பப்பட்டது.