இது தான் மனு(அ)தர்மம்!

1 Min Read

10.03.1935 -குடிஅரசிலிருந்து..

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக் கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத் தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங் களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட் டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

  1. பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. – அத்தியாயம் 8, சுலோகம் 20
  2. சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.
  3. சூத்திரனாகவும், மிலேச்சனாக வும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.
  4. ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.
  5. நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும். – அ. 8. சு. 113-115.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *