மருத்துவமும் வானியலுமே மானுடத்தின் முதல் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம், மணியம்மை அரங்கில் நடத்திய சுப வீரபாண்டியன் ஆற்றிய சொற்பொழிவு நம் அறிவுக் கண்களை திறக்க செய்த ஒன்று என்றால் அதில் வியப்பில்லை. நம் மக்கள் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பும் செய்தி சுவராசியத்தை விட செவ்வாய் தோஷம் பற்றிய விவரங்களை மணிக்கணக்கில் கேட்கும் ஆர்வமே மிக அதிகம் என்பதில் ஆரம்பித்து அய்ரோப்பா நாட்டில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டியின் முடிவுகள் பற்றி ஆக்டோபஸ் ஜோதிடம், தாய்லாந்தில் பிரபலமாகும் வெள்ளை எலி ஜோதிடம் பற்றிய தகவல்கள்.
அடி ஏதும் படாமல் தலையில் ஒரு கட்டு போட்டுக்கொண்டு தெருவில் நடந்தால் நமக்குத் தெரிந்தவர்கள் ஆளுக்கு ஒரு மருத்துவக் குறிப்பு சொல்வார்கள். அது ஏனென்றால் தேவை இருந்தால் தேடல் இருக்கும் என்ற அடிப்படையில்தான். நம்மை காப்பது இயற்பியல்: நம்மை மயக்குவது வேதியல். வாழும் நிலத்திற்கு அதிக முக்கியத்துவம் முதலில் கொடுக்கப்பட்டு மண் சார்ந்த ஜியாலஜி ஆக உருவானது. மனிதன் இரவு நேரங்களில் வான் வெளியை உற்றுப் பார்த்து அங்கு நடக்கும் மாற்றங்களை கவனிக்க தொடங்கினான். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு கி.மு. 560 வாக்கில் வான் அறிவியலில் பிரபலமான பிதாகரஸ், அரிஸ்டாட்டில், டாலமி காலத்தில் சூரியன் என்று குறிப்பிடாமல் Central Fire என்ற ஒன்றை சுத்தி மற்றவை சுற்றுகின்றன எனவும் பூமியை மற்றவை சுற்றுகின்றன என்ற கருத்தையும் முன்வைத்தனர். சூரியன் தான் மய்யப் புள்ளி என்பதை ஒத்துக் கொண்டால் அது அறிவியல், பூமி தான் மய்யப் புள்ளி என்று நம்பினால் அது ஜோதிடம் என்று இறுதியில் நெற்றி பொட்டில் அறைந்தது போல் பல விஷயங்களை உள்ளடக்கி பேசியது Periyar Vision OTT இல் முழுமையாக உள்ளது. பார்த்து தெளிவோம்…
T. வேதநாயகம்
அம்பாசமுத்திரம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com