உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து பெருமை படைத்த நம் முதலமைச்சர் ஒசூர் மாநகருக்கு நேற்று (11.9.2025) அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த போது மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவித்தும்,ஓசூரில் தந்தை பெரியார் சிலை அமைத்திட வேண்டியும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
முதலமைச்சர் அவர்கள் கழகத் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், கழக பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி,துணைச் செயலாளர்கள் இரா.ஜெயசந்திரன்,ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ், மேனாள் திராவிடர் கழக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணன்,திருவெட்டியூர் நகர தலைவர் துரை இராவணன், திருவையாறு சுரேஷ்,எக்சைடு சதிஷ், கரூர் சிவாஜி, மக்கள் அதிகாரம் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன் டி.ராமசந்திரன் கலந்து கொண்டனர்.