‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்!’ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடெங்கும் உறுதிமொழியேற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

1 Min Read

சென்னை, செப்.12–  தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) விடுத்த வலைதளப் பதிவில், “பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், ‘தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்” எனும் உறுதிமொழியினை முன்மொழி வோம்!” எனச் சூளுரைத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் அவர்களின் வலைதளப் பதிவு வருமாறு:-

தமிழ்நாட்டின் மண்,- மொழி, – மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன.

அவர்கள் அனைவரும் ஒன்றி ணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!”

“ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத் தில் இணைந்துள்ள 1 கோடி + குடும் பத்தினரும் சேர்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதி ஏற்கிறோம்!

நான், “தமிழ்நாட்டின் நாடா ளுமன்ற உறுப்பினர்களின் விகிதா சாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.

நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘SIR’-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனியவிடமாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.

நான்,“நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத் தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்குஉரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒரு போதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்”என உறுதி ஏற்கிறேன்.

நான், “தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்” என உறுதி ஏற்கிறேன்.

நான், “பெண்கள், – விவசாயிகள், – மீனவர்கள், -நெசவாளர்கள், -தொழிலாளர்கள்” என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை யும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ் நாட்டைத் தலைகுனிய விடமாட் டேன்” என உறுதி ஏற்கிறேன்.

இவ்வாறு அப்பதிவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *