சென்னை பல்கலைக் கழகத்தில் ‘சுயமரியாதை நூற்றாண்டு : பெரியாரும், திராவிட இயக்கக் கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சிறப்பாக தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 11 & 12 ஆகிய இரு நாள்களும் நடைபெறும் கருத்தரங்கத்தின் நிகழ்வுகளை சென்னை பல்கலைக் கழகத்தின் பொது விவகாரங்களுக்கான அண்ணா மய்யமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து வழங்குகின்றன.
கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சி இன்று (11.9.2025) சென்னைப் பல்கலைக் கழகத்தின் தந்தை பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர் நிலை) வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர்
ஆ. இராசா ஆகியோருக்கு விழா குழுவின் சார்பில் பய னாடை அணிவித்து, பூங்கொத்து, புத்தகத்தை வழங்கினர்.
கருத்தரங்கத்தின் குறிப்புகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் குறிப்பிட்ட கட்டுரை ஆசிரியர்கள் ஆகிய சிறு நூலை தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
கருத்தரங்கின் தலைமையுரையினை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) வேந்தர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் ஆற்றினார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர்
ஆ. இராசா முக்கிய உரையினை வழங்கினார்.
பொது விவகாரங்களுக்கான மய்யத்தின் தலைவர் முனைவர் கலைச்செல்வி, வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கின் நோக்கம் பற்றி முனைவர் கோ. ஒளிவண்ணன் எடுத்துரைத்தார். சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், துணவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினருமான முனைவர் ஆர்ம்ஸ்டராங் கருத்தரங்கினை வாழ்த்தி உரையாற்றினார்.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சென்னை பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் முனைவர் பெ. ஜெகதீசன் மற்றும் பொறுப்பாளர்கள், பொது நலச் சங்கத்தினர் பலரும் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்
சா. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் கலந்து கொண்டனர்.