ஜெல்லி: ஓர் அழிவற்ற உயிரினமா?

2 Min Read

உலகில் இயற்கையான முதுமையினால் இறக்காத “அழியாத ஜெல்லி மீன்”  (turritopsis dohrnii) என்ற ஒரே ஒரு உயிரினமே அது.

இந்த ஜெல்லி மீன் வயதாகும்போது அதன் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் மீண்டும் தன்னைப் பழைய பாலிப் நிலைக்கு மாற்றி மறுபடியும் வளரத் தொடங்குகிறது. இயற்கை மரணம் இல்லாமல் வாழும் ஒரே உயிரினம். இந்த சிறிய வகை ஜெல்லி மீனை ‘அழியாத  ஜெல்லிமீன்’ இதுதான் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆய்வுகள்.இந்த ஜெல்லி மீனின் செல்கள் தங்களை மீண்டும் புதுப்பிக்கும் திறன் விஞ்ஞானிகளுக்கு மரணம் மற்றும் முதுமை பற்றி ஆய்வுகள் செய்ய உதவியாக இருக்கிறது. என்றென்றும் உயிர்  வாழும் ஜெல்லி ஃபிஷ் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் அளவில்லா இந்த உயிரினத்தின் ஒரு தனித்தன்மை என்னவென்றால் அது பாலியல் முதிர்ச்சியை அடைந்த பிறகு மீண்டும் ஆரம்ப நிலைக்கே திரும்புகிறது.  பின்னர் மீண்டும் முதிர் வயரை அடைகிறது. இந்த செயல்முறை மீண்டும் மீண்டும் இப்படியே தொடர்கிறது.

எனவே முதுமையினால் ஏற்படக்கூடிய இயற்கையான மரணம் இந்த ஜெல்லி மீன் இனத்திற்கு கிடையாது. அதனால்  இதை ஆங்கிலத்தில் ‘இம்மார்டல் ஜெல்லிமீன்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ஜெல்லி மீனிங் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ அவை உடனடியாக ‘பாலிப்’ நிலைக்கு, சென்று விடும். பாலிப் நிலையில் ஜெல்லி மீனைச் சுற்றி  ஒரு சளி ஜவ்வு உருவாகிறது இந்தப் பாலிப்கள் மூன்று நாட்களுக்கு இதே நிலையில் இருக்குமாம். இந்த நிலையில்  ஜெல்லி மீன் உடலிலுள்ள அனைத்து செல்களையும் புதிய செல்களாக மாற்றி முதுமையை முற்றிலும் குறைக்கிறது. திரும்பத் திரும்ப இப்படி செய்வதன் மூலம் அவை வயதாவதை தடுக்கின்றனவாம். இதனால் இந்த உயிர் இனம் இயற்கையாக மரணம் அடைவதில்லையாம்.

இந்த ஜெல்லி மீன்கள் முதுமையினால் ஒருபோதும் இறக்காது. அதே நேரம் இந்த வகை ஜெல்லி மீன்களை சுறாக்கள், வாள்மீன்கள், கடல் ஆமைகள் வேட்டையாடப்படுதல்  நோய் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் மட்டுமே இறக்கக் கூடும்.

எனவே  திரிட்டோபசிஸ் டோர்னி என்பது குறிப்பிடத்தக்க திறன்கொண்ட அற்புதமான உயிரினம்என்றாலும் அது ஒருபோதும் அழியாதது அல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து  ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *