மதுரை, செப். 11- நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த தேனி காவ லரின் உடல் உறுப்புகள் நன்கொடையாக வழங் கப்பட்டன. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள் ளனர்.
பழனி காவலர்
தேனி மாவட்டம் கூழையனூர், பாலார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் முனியாண்டி (வயது 27) இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி 14-ஆவது பட்டாலியனில் காவ லராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7-ஆம் தேதி, சின்னமனூர்-வேப்பம் பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டு, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக் கத்தினர், தேனி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் (8.9.2025) மதுரை அரசு மருத்துவமனையில் முனியாண்டி அனுமதிக் கப்பட்டார், அங்கு தலைக்காய சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.
உடல் உறுப்புக் கொடை
இதனைத் தொடர்ந்து, முனியாண்டியின் உடல் உறுப்புகளை, கொடை செய்வது குறித்து அவரது குடும்பத்தினரிடம் எடுத் துரைக்கப்பட்டது. அவர்க ளும் ஒப்புக் கொண் டனர்.
இதைதொடர்ந்து அவ ரது உடல் உறுப்புகளை, அரசு மருத்து வர்கள் குழு வினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். கல்லீரல் நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதுபோல், சிறு குடல், நுரையிரல் ஆகி யவை சென்னையில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கும், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவ மனைக்கும் கொடையாக வழங்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டன.
சிறுகுடல், நுரையீரல் ஆகியவை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
6 பேருக்கு மறுவாழ்வு
இந்த உடல் உறுப்புக் கொடை மூலம், 6 பேர் மறுவாழ்வு பெற்று இருப்ப தாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.