சென்னை, செப். 11 –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “காவலர் நாள் விழா- – 2025” உறுதிமொழி ஏற்-கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தி-னம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-இல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காவலர் நாள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-–2026 பட்ஜெட் கூட்டத் தொடரில், “முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும்” என்று அறி-வித்தார்.
அதன்படி, முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடு-களை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.9.2025) சென்னை, எழும்-பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உறுதிமொழி
“இந்திய அரசியலமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல் துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மை-யான ஈடுபாடும், உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று, மனமார உறுதி கூறுகிறேன்.
எந்தவித அச்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், நியாய உணர்வுடன் என் கடமை-களை நிறைவேற்றுவேன் என்றும் உறுதி யளிக்கிறேன்.”
மேலும், காவலர் நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவலர் குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கி, சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், காவல் துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) க. வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.