வன்னிப்பட்டு சோ.செல்லப்பன் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை

3 Min Read

வன்னிப்பட்டு, செப். 10- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கீழவன்னிப்பட்டு அஞ் சம்மாளின் வாழ்விணையர் அருமுளை ஊராட்சி செயலாளர் செ. சங்கர், திராவிடர் கழக தஞ்சை மாநகரத்தலைவர், தஞ்சை தமிழ் பயண தொடர்பக உரிமையாளர் செ.தமிழ்ச்செல்வன், வன்னிப்பட்டு ஊராட்சி செயலாளர் செ.குருமூர்த்தி, பொறியாளர் செ.குமார் ஆகியோரின் தந்தையார் சோ.செல்லப்பனின் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 7.9.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் கீழவன்னிபட்டில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தவமணி நிகழ் விற்கு தலைமையேற்று உரை யாற்றினார்.

வீ.அன்புராஜ்

திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா. குணசேகரன் மாவட்ட காப்பாளர் மு. அய்யனார் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி AITC பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் ஆகி யோர் முன்னிலை ஏற்று நினைவேந்தல் உரையாற்றினர்.

திராவிடர் கழக துணைச் பொது செயலாளர் சே.மெ.மதிவதனி நிகழ்வில் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

பெரியார் அறக்கட் டளை உறுப்பினர் கு.அய்யா துரை, தஞ்சை ஹெரிடேஜ் ரோட்டரி சங்க மேனாள் தலைவர் ரகு, தஞ்சை மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் தினகரன், அனைத்திந்திய மகளிர் முன்னேற்ற சங்க தலைவர் சொர்ணா, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், ஒக்கநாடு கீழையூர் திமுக பொறுப் பாளர் பாரத் மருத்துவர் அரவிந்தன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்

பகுத்தறிவாளர் கழக ஊடகத் துறை தலைவர் மா.அழகிசாமி, மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு நகர செயலாளர் செந்தில்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், திமுக ஒன்றிய துணைச்செயலாளர் ஒக்கநாடு கீழையூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தஞ்சை ஹரிடேஜ் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல், தஞ்சை மிட்டவுன் ரோட்டரி சங்கத் செயலாளர் வீரமணி, மன்னார்குடி மாவட்ட செயலாளர் கோ.கணேசன்,

பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன், தஞ்சை மாநகர விடுதலை வாசக வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் துரை, ஒரத்த நாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரஞ்சிக்குமார், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பொதுக்குழு உறுப்பினர் மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை துணைச் செயலாளர் செந்தில், ஒக்கநாடு கீழையூர் கவுதமன் மாவட்ட வழக் கறிஞர் அணி செயலாளர் மாரிமுத்து, ஊராச்சி திருநாவுக்கரசு, சாக்கரடீஸ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திராவி டர் கழக தோழர்கள் உற வினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *