தஞ்சை மாவட்டம், பாபநாசம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கருப்புச்சட்டை தி.ம. நாகராசன் (வயது 92) இன்று (10.9.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.
ஊராட்சி மன்றத் தலைவராகவும், கூட்டுறவு வங்கித் தலைவராகவும், இருந்து பொது நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஊரில் நற்பெயர் ஈட்டியவர்.
அவர் விரும்பியபடி தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்கப்படுவது – அவரின் மனிதநேயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.9.2025