சென்னை, செப்.10- கூட்ட நெரிசலை பயன்படுத்தி நூதன முறையில் திருடும் சம் பவங்களில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டு வருகிறது.பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.
வடமாநில கும்பல்
சென்னையில் ‘நவோ னியா’ என்ற வடமாநில கும்பல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை குறி வைத்து, நூதன முறையில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே காவல்துறையி னரும், உள்ளூர் காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது, இந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தை இருப்பிடமாக கொண்ட வர்கள். இவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், வணிகவளாகம் மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் சுற்றித்திரிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களிடம் இவர்கள் திருடும் விதமே மிகவும் வித்தியாசமானதாகும். அதாவது, திருட்டு சம் பவத்தில் ஈடுபடும்போது கையில் துண்டு, கைக்குட்டை, கையுறை ஆகியவற்றை பயன்படுத்தி நூதன முறையில் திருடியுள்ளனர். இவர்கள் சிறு, சிறு குழுவாக பிரிந்து இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள் ளனர்.
மக்கள் கூடும் இடங்களில்…
பின்னர், திருடிய பொருட்களை உடனடி யாக விற்று பணம் பெற்றும் வந்துள்ளனர். பொதுவாக பெரிய நகரங்களில் ஒருவாரம் தங்கியிருந்து பல திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள், பின்னர், பெங்களூரு, விஜயவாடா, ஹவுரா போன்ற பகுதிகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த கும்பல் கடந்த ஒரு வாரமாக சென்னையில் வலம் வந்து பல்வேறு திருட்டுகளை செய்து வந்தனர். குறிப்பாக, சென்னை சென்ட்ரல், பூங்கா, மற்றும் மாம் பலம் போன்ற ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு கவுண்ட்டர்களில் கூட்ட நெரிசலை பயன் படுத்தி பயணிகளிடம் நூதன முறையில் கைப்பேசி திருடியுள்ளனர். மேற்கண்ட தகவல் ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
கடந்த 31ஆம் தேதி மெரினா கடற்கரையில் மீன் வாங்கி கொண்டிருந்த ஒருவரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து, கடந்த 6-ந்தேதி 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது ஏற்கனவே ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
இதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அருகே ரயில் பயணியிடம் கைப்பேசி திருட முயன்ற அதே கும்பலை சேர்ந்த மற்றொருவரையும் ரயில்வே காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறை எச்சரிக்கை
இதுகுறித்து, ரயில்வே காவல்துறை கூறியபோது, ‘இந்த கும்பல் அதிக அளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது இந்த கும்பலில் 4 பேர் சிக்கி உள்ளனர். இது போன்ற கும்பலிடம் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்கள்.