என்னப்பா சிவா நேத்து சாயந்திரம் நீ வருவேன்னு நானும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஏம்பா என்ன ஆச்சு?? ஏன் வரல?. அட அது ஒன்னும் இல்லப்பா… புத்தக கண்காட்சி பத்தி கேள்விப்பட்டு இருப்ப. இன்னும் ரெண்டு நாள்ல கண்காட்சி முடிய போகிறது என்று கேள்விப்பட்டேன் சரி ஒரு நட போயிட்டு வந்துடலாம் அப்படின்னு கிளம்பி போனம்பா. கூட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கத்தான் செய்தது. எனக்கு புடிச்ச தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிட்டு கிளம்பும்போது பெரியார் புத்தக அரங்கத்தில சில பேர் பரபரப்பா புத்தகங்களை வாங்கி கொண்டு இருப்பதை பார்த்து நானும் உள்ளார போனேன். ஏகப்பட்ட புத்தகங்கள். நிறைய வாங்கலாம் படிக்கலாம் என்ற ஆசை இருந்தாலும் கையில் இருந்த காசுக்கு ஏத்த மாதிரி நாலு புத்தகத்தை செலக்ட் பண்ணி வாங்கிட்டு வந்தேன். அதனாலதான்பா நேத்து நான் சொன்ன மாதிரி வர முடியல சாரி டா. சரி வேற என்னடா விசேஷம்…? அதுவா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். Periyar Vision OTT இல் என்ன புதுசா இருக்கு அப்படின்னு பாத்துட்டு இருந்தேன். அதுல புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த ஒருவர் பெரியார் புத்தக அரங்கத்தில் பெரியாரும் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று விவரமா மனசுல பட்டத ஓபனா சொல்லியிருந்தது ரொம்ப நல்லா இருந்துச்சு. தந்தை பெரியார் இறந்து போய் 50 வருஷம் ஆனாலும் இந்த பிஜேபி ஆரிய கூட்டம் இன்னும் அவரை ஏன் திட்டி தாக்குறாங்கன்னு அவர் சொன்ன விதம் சூப்பர். தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் என்று அவர் முடித்த விதம் மிக அருமை. நீங்களும் பாருங்கள் .
-K தர்மராஜ்
சின்னசேலம்.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com