மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் தனிநபர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான குறுகிய கால சான்றிதழ் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மய்யம் சார்பில், கல்வியா ளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியல் மாண வர்களுக்கும் தனிநபர்கள், தொழில்முனைவோர், கண்டு பிடிப்பாளர்கள், தொழில் துறையினர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், புத்தாக்க தொழில்துறையினர் (ஸ்டார்ட்-அப்) ஆகியோர் தங்களின் புதிய கண்டுபிடிப்பு களை பாதுகாக்கும் வகையில், அறிவுசார் சொத்துரிமை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், ஒரு வார கால சான்றிதழ் பயிற்சி செப். 16 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அறிவுசார் சொத்துரிமை மய்யத்தின் இயக்குநரை அணுகலாம். கூடுதல் விவரங்களை www.annauniv.edu/ipr என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.