பிஜேபி முதலமைச்சர்
கெஞ்சும் பரிதாபம் – ஏனிந்த நிலை?
இம்பால், மே 30- மணிப்பூரில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை பொது மக்கள் தாக்கி சூறையாடி வரும் நிலையில், ‘தயவு செய்து யாரும் எங்களைத் தாக்க வேண்டாம்’ என்று மணிப்பூர் பாஜக முதல மைச்சர் பைரேன் சிங் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். மணிப் பூர் மாநிலத்தில் பைரேன் சிங் தலை மையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், வாக்கு அரசியலுக்காக, இங்கு வசித்து வரும் ‘மெய்டெய்’ (Meitei) என்ற பிரிவினருக்கு, ‘பழங்குடியினர்’ (Scheduled Tribe) அந்தஸ்து வழங்கு வதாக பாஜக ஆசை காட்டியது. மெய்டெய் மக்கள், இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதி களில் அதிக அளவில் இருப்பதாலும், மாநில மக்கள் தொகையில் 53 சதவிகி தமாக இருப்பதாலும், இவ் வாறு பாஜக செய்தது.
இரு பிரிவினரிடையே மோதல்
அதன்படியே, மெய்டெய் மக் களின் வாக்குகளைப் பெற்று ஆட் சிக்கும் வந்தது. அத்தோடு, பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை மறந்து விட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத்தை நாடிய மெய்டெய் மக்கள், தங் களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றனர். மெய்டெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், உரிய முடிவு எடுக் குமாறு, மணிப்பூர் பாஜக அரசுக்கு கடந்த ஏப்ரல் 19 அன்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்துதான், மெய் டெய் மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கக் கூடாது என்று, குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி யினர், ‘அனைத்து பழங்குடி மாண வர் சங்கம் மணிப்பூர் (ATSUM)’ என்ற பெயரில் 7 மலை மாவட் டங்களில் பேரணி நடத்தினர். மற்றொரு புறத்தில், இந்தப் பேரணிக்குப் போட்டியாக, பழங் குடி அல்லாதோரும் எதிர்ப் பேரணி நடத்தினர். அப்போது, சுராசந்த்பூர் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற் பட்ட மோதல், மாநிலந் தழுவிய வன்முறையாக மாறியது. ‘மெய் டெய்’ மற்றும் ‘குக்கி’ பிரிவைச் சேர்ந்த மக்கள் பிரிவினர், தங்களுக் குள் மாறி மாறி, கத்தி, அரிவாளுடன் மோதிக் கொண்டது டன், வீடுகள், கடைகள், வாகனங்களுக்குத் தீ வைத்தனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இந்த வன்முறை, மணிப்பூரில் 78 உயிர்களை காவு வாங்கியது. ஆயி ரக்கணக்கானோர் காயம் அடைந் தனர். பல ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. தேவாலயங்கள், கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இதன் பின்னணியில், மணிப் பூரில் அரசமைப்புச் சட்டத்தின் 355ஆவது பிரிவை அமல்படுத் திய ஒன்றிய பாஜக அரசு உளவுத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அசுதோஷ் சின்ஹா, மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் குல்தீப் சிங் ஆகியோர் தலைமையில், விரைவு நடவடிக்கை படை (RAF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளிட்ட ஆயுதப் படை களை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைத்தது. இந்திய ராணு வம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவ ழைக்கப்பட்டன. இதனால் மணிப் பூரில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பி வந்தது. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண் டும் வன்முறை வெடித்தது. துப் பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப் பட்டார். 2 பேர் காயம் அடைந் தனர். குக்கி பழங்குடி சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் பொதுப் பணித்துறை அமைச்சரும் பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவ ருமான கோவிந்தாஸின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. அமைச்சரோ, அவரது குடும்பத் தினரோ யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டில் சுமார் 100 பேர் நுழைந்து, தாக்குதலில் ஈடுபட்டனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வியாழக்கிழமையன்று நடந்த மற்றொரு வன்முறைச் சம்பவத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் வீட்டைச் சூறையாடினர். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மாநிலத்தில் ஏற்கெனவே 24 நாட்க ளாக இணையச் சேவைகள் முடங் கிக் கிடக்கும் நிலையில், தற்போது மேலும் 5 நாட்களுக்கு இணையச் சேவைகள் முடக்கப்படுவதாக அறி விக்கப்பட்டு உள்ளது.
ராணுவ வீரர்கள் குவிப்பு
மணிப்பூரில் சுமார் 34 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட் டுள்ளன. இம்பால் பள்ளத் தாக்கி லிருந்து மலைப்பகுதிகளை பிரிக் கும் பகுதி களில் வன்முறையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் 38 இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங், 26.5.2023 அன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்லது யார் மீதும் எந்தவிதமான வன்முறையி லும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கி றேன்” என்று மணிப்பூர் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். நாங்கள் மக்க ளுக்காக இருக்கிறோம். மக்கள் விரும்புவதை நாங்கள் செய்வோம். அது உறுதி. எதற்காக வேண்டு மானாலும் எங்களிடம் வரலாம். நாங்கள் 24 மணி நேரமும் இங்கே இருக்கி றோம். மக்கள் என்னிடமோ அல்லது எனது சக அமைச்சர் களிடமோ பேசி தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ளலாம். மணிப்பூரில் நிலவும் தீவிரம், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பாஜக செய்தித் தொடர் பாளர் சம்பித் பத்ரா ஆகியோரை இம்பாலுக்கு வரச் செய்தது. அமைதியையும் இயல்பு நிலை யையும் கொண்டு வருவதற்காக அவர்கள் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளைச் சந்தித்து வரு கின்றனர். ஆனால், மணிப்பூரில் உள்ள பிரச்சனைகள் மிகவும் சிக்க லானவை. அரசமைப்பு விதிகள் மற்றும் விவாதங்கள் மூலம் மட் டுமே, இந்தப் பிரச்சினைகள் தீர்க் கப்பட முடியும். இந்த இக்கட்டான காலங்களில் எந்த ஒரு பிரி வினையை யும் நாம் அனுமதிக்கக் கூடாது. காவல்துறையினரிடம் இருந்து கொள்ளையடித்த துப் பாக்கிகளை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.