பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்து வாழ்த்துரை
ஜெயங்கொண்டம், மே 30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் உட்கோட்டை அப்பாசாமி கணேசன் வீரம்மாள் ஆகியோரின் மகன் அ.க. அருள்மணி, நாகைமாவட்டம் கீழ் வேளூர் வட்டம் வடகரை மேட்டு தெரு சவு.கருணாநிதி மணிமேகலை இவர்களின் மகள் க.தென்குமரி ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழா வீரசோழபுரம் கிருஷ்ண மகாலில் 28.5.2023 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவ ரையும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக பொன்முடி வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப் பாளர் சி.தங்காத்தாள்ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் சி. காம ராஜ், கழக காப்பாளர் சு. மணிவண்ணன் குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெபுபேஷ் குப்தா, அரிய லூர் மாவட்ட செயலாளர் க. சிந்தனை செல்வன், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை குருசாமி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கிய பின்னர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
பின்னர் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் சுயமரியாதை திருமணத் தின் சிறப்புகளை விளக்கி உரையாற்றிய பிறகு கழகப்பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மணக்களின் சிறப்புகளைப் பாராட்டி இயக்கப் பணித்தோழர்கள் என்பவர்கள் எங்களைப் பொறுத்த வரையில் பணியாளர்கள் அல்ல. எங்கள் உறவுக்கார்கள். எங்களைப் பாதுகாப்பவர்கள் இயக்க செயல்பாடு களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். அறிஞர் அண்ணா அவர்களால் சட்ட வடிவமாக்கப்பட்ட சுயமரியாதை திரு மணம் பல சிறப்புகளைக் கொண்டது. மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அருள்மணி – தென் குமரி ஆகியோர் சிறப்பாக வாழ வாழ்த்து கிறேன் எனக் குறிப்பிட்டு உரையாற்றி மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தார்.தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.
மணவிழாவையொட்டி ஏராள மான கழகக் கொடிகள் கட்டப்பட்டும், பதாகைகள் வைத்தும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் செந்துறை மா சங்கர் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன், வடலூர் இந்திரசித்து,உத்திரக்குடி ஆ. ஜெய ராமன், நாகை மாவட்ட அமைப்பாளர் பொன். செல்வராசு, மாநில சட்டக் கல்லூரி அமைப்பாளர் இளமாறன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், பெரியாக்குறிச்சி சோ.க.சேகர் உள்ளிட்ட ஏராளமான கழகப் பொறுப்பாளர்களும், தோழர் களும் உறவினர்களும் நண்பர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.