10.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகார் மாநில இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக அதிகரிப்பு. மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.
* நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் ஆவணங்கள் அதானி குழுமத்தின் இந்தியா டுடே டிவியில் ஒளிபரப் பானது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா, மக்களவை தலைவருக்கு புகார் கடிதம்.
* ஜாதிவாரி கணக்கெடுப்பு மக்களின் நிலை அறியும் எக்ஸ்-ரே. ம.பி.யில் ஆட்சிக்கு வந்ததும் கணக்கெடுப்பு நடத்துவோம், ராகுல் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மஹூவா, எம்.பி. மீதான விசாரணை, அவசர கோலத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் மோடி ஆட்சியால் நடத்தப்படுகிறது. இது ஆபத்தான முன்மாதிரி என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
– குடந்தை கருணா