ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. வெளியிட்டுள்ள காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (8.9.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம்
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட் டுள்ள எல்.ஓ.சி.எஃப் காவி வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் மாலை 5.00 மணிக்கு தொடங்கி திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் மு.இளமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் மாவட்ட மாணவர் கழகத் துணை செயலாளர் இரா.சரண் வரவேற்பு உரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் தா.இளம்பரிதி, விருத்தாச்சலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விழுப்புரம் கழக காப்பாளர் கொ.பூங்கான், திண்டிவனம் கழக காப்பாளர் செ.பரந்தாமன், கல்லக்குறிச்சி கழக காப்பாளர் ம.சுப்பராயன், புதுச்சேரி கழக காப்பாளர் இரா.சடகோபன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாச்சலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், திண்டிவனம் மாவட்ட தலைவர் இர.அன்பழகன், விழுப்புரம் மாவட்ட தலைவர் சே.வ.கோபன்னா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன் மற்றும் புதுச்சேரி மாவட்ட மாணவர் கழக தலைவர் பி.அறிவுச்செல்வன், சிதம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன், விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் ஏ.பெருமாள், செல்வகுமாரி ஆகியோர் ஒன்றிய அரசின் காவி வரைவு அறிக்கைக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்து உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநிலக் கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வத்தியத்தேவன் கண்டன உரையாற்றினார். இறுதியாக விருத்தாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன் நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கல்லக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் மற்றும் விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்களும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசின் காவி வரைவு அறிக்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
சேலம்
திராவிட மாணவர் கழகம் 08-09-2025 அன்று காலை 11:00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் ஒன்றிய அரசு (U.G.C.) யூ.ஜி.சி என்னும் அமைப்பின் மூலமாக வெளியிட்டுள்ள (L.O.C.F.) எல்.ஓ.சி.எப். எனப்படும் வரைவறிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் ச. தமிழ்செல்வம் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்ட மாணவர் திராவிடர் கழக அமைப்பாளர் வி.ஆகாஷ் வரவேற்று பேசினார்.
கழகக் காப்பாளர்கள் பழனி புள்ளையண்ணன், கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணி, விடுதலை சந்திரன் மற்றும் வீரமணி ராஜூ சேலம் மாவட்ட தலைவர், கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட தலைவர்), கோவி.அன்புமதி (மேட்டூர் மாவட்ட தலைவர் ப. க.), அ.சுரேஷ் (ஆத்தூர் மாவட்ட தலைவர்), வனவேந்தன் (ஒசூர் மாவட்ட தலைவர்), திராவிட மணி (கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த எல்லோரும் ஒன்றிய அரசின் காவி வரைவறிக்கையை கண்டித்து அனல் தெறிக்க கண்டன முழக்கங்களை எழுப்பியது மாணவச் செல்வங்களின் பொறுப்பாளர்களின் தோழர்களின் உள்ளக் குமுறலை எரிமலைக் கங்குகள் போல் கொப்பளித்து வெளிக் கொட்டியது. அனைத்து காப்பாளர்களும் அனைத்து மாவட்ட தலைவர்களும் கண்டன உரை ஆற்றினர்.
சிறப்பு கண்டன உரை மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துனைச்செயலாளர்), ப. காயத்ரி (மாநில மகளிரணி துணைச்செயலாளர்), தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) எழுச்சிமிகு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேங்க் ராஜு, மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), சி.பூபதி (சேலம் மாவட்ட செயலாளர்), ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்ட செயலாளர்), சு.இமயவரம்பன் (சேலம் மாவட்ட துணைத்தலைவர்), மூணாங்கரடு பெ.சரவணன் (சேலம் மாவட்ட துணைச் செயலாளர்), அரங்க. இளவரசன் (சேலம் நகர தலைவர்), ச. வெ. இராவண பூபதி (சேலம் நகர செயலாளர்), துரைசக்திவேல் (சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர்), இரா.கலையரசன் (மேட்டூர் நகர தலைவர்), வெ.மோகன் (திருச்செங்கோடு நகரத் தலைவர்), மா.முத்துக்குமார் (திருச்செங்கோடு நகரச் செயலாளர்), அ.சரவணன் (குமாரபாளையம் நகரத் தலைவர்), ஆனந்தகுமார் கணேசன் (நாமக்கல் மாவட்ட இளைஞரணித் தலைவர்), பழ. பரமசிவம் (சூரமங்கலம் பகுதி தலைவர்), போலீஸ் ராஜு (சூரமங்கலம் பகுதி செயலாளர்), மணிமாறன் (சேலம் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்), பெரியார் பற்றாளர்கள் கூ. காதர் செரிப், கோடிலிங்கம், கூ. செல்வம், ப. செல்வகுமார், இ.மாதன், கே. சின்னராசு, மு.மனோகரன், பி. திலகவதி,ச. ஈசுவரய்யா, பாண்டியன், இரா.புகழேந்தி, சு.புகழேந்தி, ஆ. தினேஷ்குமார், சு.சிறீகுரு, மூ.பெ.கான், இர. இராஜேஷ், கோ.குமார், வி.ஆகாஷ், கே.அழகேசன், எஸ்.சுந்தர், ஜெ.காளியப்பன், மு.சீனிவாசன், க.பொன்னுசாமி, பி.பெரியசாமி, அ.செழியன் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக சேலம் மாவட்ட துணைச் செயலாளர் அ.இ.தமிழர்தலைவர் நன்றி கூறினார். அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
மதுரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஒன்றிய அரசின் யூ.ஜி.சி.(U.G.C)வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப்.(L.O.C.F) காவி வரைவு அறிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, தென் மாவட்டங்களின் சார்பில் மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் நகர் தந்தை பெரியார் சிலை முன்பு 08/09/2025 திங்கள் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது,
தலைமை:சீ தேவராஜபாண்டியன் மாநில துணை செயலாளர், திராவிட மாணவர் கழகம், வரவேற்புரை: க.மாணிக்கவள்ளி மதுரை புறநகர் மாவட்ட, திராவிட மாணவர் கழக துணை செயலாளர், முன்னிலை:த.ம.எரிமலை மதுரை புறநகர் மாவட்ட தலைவர், பா. முத்துக்கருப்பன் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், அ.முருகானந்தம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர், லீ.சுரேஷ் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், கா.நல்லதம்பி விருதுநகர் மாவட்ட தலைவர், தி. ஆதவன் விருதுநகர் மாவட்ட செயலாளர், துவக்கவுரை:உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம், கண்டனவுரை: இரா.பெரியார்செல்வம் தலைமை கழக சொற்பொழிவாளர்,
பங்கேற்றோர்: மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் பொருப்பாளர்களும், தோழர்களும் திரளாக பங்கேற்று ஆர்ப் பாட்ட முழக்கங்களை எழுப்பினர். நன்றியுரை:ம.ரஞ்சித்குமார் திராவிட மாணவர் கழக தலைவர், மதுரை புறநகர் மாவட்டம்.
திருச்சி
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப். வரைவறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் எதிரில் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (செப்.8) நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை நிலைய அமைப்பாளர் ப.ஆல்பர்ட், திருச்சி மாவட்டச் செயலாளர் சு.மகாமணி, லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, கரூர் மாவட்டத் தலைவர் ப.குமாரசாமி, செயலாளர் காளிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கரூர் அன்பு, கரூர் மாவட்ட காப்பாளர் ராஜ், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் ச.துரைசாமி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் க.அம்பிகா, இரா.மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கிலிமுத்து, சி.கனகராஜ், மாநகர தலைவர் வ.ராமதாஸ், மாநகர மகளிரணி தலைவர் ரா.பேபி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சே.வசந்தி, ஜெயில்பேட்டை அமுதா, திருவரங்கம் நகர செயலாளர் இரா.முருகன், காட்டூர் பாலசுப்ரமணியன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், மார்க்கெட் தலைவர் மணிவேல், காட்டூர் தலைவர் அ.காமராஜ், பெல் ம.ஆறுமுகம், மணப்பாறை நகர செயலாளர் சி.எம்.எஸ். ரமேஷ், மணப்பாறை ஒன்றிய தலைவர் ரெ.பாலமுருகன் கல்பாக்கம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார். இதில் பெருமாள், விடுதலை, ராமலிங்கம், செல்வராஜ், பாபு, பிச்சைமணி, புதுகை வீரப்பன், பழனியப்பன், குமாரசாமி, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட துணை செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.
தஞ்சை
ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் காவி வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் பனகல் கட்டிடம் அருகில் மாலை 5.00 மணிக்கு தொடங்கி திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமானது எழுச்சியோடு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் சரபோஜி கல்லூரி மாணவர் கழக பொறுப்பாளர் அ.உதயபிரகாஷ் வரவேற்பு உரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் அமர்சிங் ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்து உரையாற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம்,
அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மன்னார்குடி மாவட்ட செயலாளர் கோ.கணேசன், காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி நீலகண்டன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செந்துறை அறிவன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் வி.மோகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி.க.அன்பழகன் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக மன்னார்குடி மாணவர் கழக செயலாளர் ச.சாருக்கான் நன்றி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மாணவரணி தலைவர் குட்டிமணி தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்ககொழுந்து அரியலூர் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் நரேந்திரன் தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவு தாசன் விடுதலை வாசர் வட்ட செயலாளர் ஏ வி என் குணசேகரன் விடுதலை வாசர் வட்ட துணைத்தலைவர் துரை புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி கலைச்செல்வன் மன்னார்குடி மாவட்ட துணைத் தலைவர் இன்பக்கடல்
பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல் பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் பொய்யாமொழி மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம் குடந்தை மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி திருவையாறு விவேக விரும்பி குடந்தை ரியாஸ் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சாமிநாதன், மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் சந்துரு திருவையாறு கௌதமன், குழுமூர் சுப்புராயன், அ.பெரியார் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று ஒன்றிய அரசின் காவி வரைவு அறிக்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, மு.சண்முகப்பிரியன், கரு.அண்ணாமலை, சா.தாமோதரன், பெரியார் யுவராஜ், இரா.மாரிமுத்து, அ.அன்பரசன், மு.இரா.மாணிக்கம், ந.மணித்துரை.
வடசென்னை: தே.சே.கோபால், புரசை சு.அன்புச்செல்வன், புகழேந்தி, வழக்குரைஞர் மு.வேலவன், சு.துரை ராஜ், கோபால கிருஷ்ணன், ச.ராஜேந்திரன், தி.செ.கணேசன், கோ.தங்கமணி, சி.காமராஜ், இராமு, அருள், மகேஷ் மற்றும் கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை),
தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், குணசேகரன், மறைமலைநகர் சிவக்குமார், கூடுவாஞ்சேரி இராசு,
கும்முடிப்பூண்டி மாவட்டம்: புழல் த.ஆனந்தன், சோழவரம் ப.சக்கரவர்த்தி, பொன்னேரி அருள், வடகரை உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி, ந.கஜேந்திரன்,
ஆவடி மாவட்டம்: வெ.கார்வேந்தன், க.இளவரசன், இரணியன், திராவிடமணி அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, ஆவடி ஜெயராமன், சுந்தராஜ், வஜிரவேல், புஷ்பா, திருநின்றவூர் ரகுபதி, அம்பத்தூர் கு.சங்கர், கொரட்டூர் இரா.கோபால், ஆவடி தமிழ்மணி, அம்பத்தூர் முத்துகிருஷ்ணன், சரவணன், ராமலிங்கம், தேவேந்திரபாபு, உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன்,
மகளிரணி: இறைவி, பெரியார் செல்வி, மு.பசும்பொன், புஷ்பா, அமலாசுந்தரி, நர்மதா, மணிமொழி, இராணி, வெண்ணிலா, முகப்பேர் செல்வி, ராணி ரகுபதி, பூவை செல்வி, மு.செல்வி, த.மரகதமணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, இளவரசி, தங்க.தனலட்சுமி, செ.பெ.தொண்டறம்.