ஒரத்தநாடு, செப். 9- திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு-மாதவி ஆகியோரின் மகன் பொறியாளர் துரை.தமிழ்வேந்தன் – மேல உளூர் ராமையன்-ராஜகுமாரி ஆகியோரின் மகள் இரா.மீனா வாழ்க்கை இணைநல ஒப்பந்தவிழா 7.9.2025 ஞாயிறு காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் ராஜ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் மு அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், அ.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன், தஞ்சை மாநகர மேயர் சண்.ராமநாதன் தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன் கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி அதிமுக மாவட்ட செயலாளர் மா.சேகர் அதிமுக அமைப்பு செயலாளர் துரை. திருஞானம், ஆர்.வி.பிரபு, துரை.கோ. கருணாநிதி, அதிமுக தஞ்சை மாநகர செயலாளர் சரவணன், கார்த்திகேயன், செல்லரமேஷ்குமார், மா.அழகிரிசாமி, பேபி ரெ.ரவிச்சந்திரன், பு.செந்தில்குமார், ச.சித்தார்த்தன், மா.அழகிரிசாமி, கோபு.பழனிவேல், நா.எழிலரசன், பி.பெரியார்நேசன், இரா.வெற்றிக்குமார், இரா. செந்தூரபாண்டியன், இராமலிங் கம், வெ.நாராயணசாமி, முனைவர் வே.இராஜவேல், தீ.வா.ஞானசிகாமணி, பா.நரேந்திரன், ரெ.சுப்பிரமணியன், நா.அன்பரசு, கோவி.இராமதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அ.இஅ.திமுக வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சா.ஜானகி ராமன் நன்றி உரையாற்றினார்.