சென்னை, செப்.9 கோயம்புத்தூரில் அடுத்த மாதம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாடு 2025-க்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஸ்டார்ட்அப் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் என சுமார் 30,000 தொழில்முனைவோர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.